புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது? எவ்வாறு தடுக்கலாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இன்று சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர்.
சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது.
அனைத்து புற்றுநோய்களும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பிரிதலைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றன.
மரபணு சேதத்துக்கான காரணங்கள்
பரம்பரை, தொற்றுகள், நாள்பட்ட வீக்கம், ரசாயன வெளிப்பாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள், புகைத்தல், ஆல்கஹால் மற்றும் பல அறியப்படாத காரணிகள்.
இந்த கலங்கள் பிரிந்து பெருகி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புற்றுநோய் கலங்கள் குருதியின் வழியாக பரவுகின்றன.
இது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து என்ன புற்றுநோய் என பெயரிடப்படுகின்றது. மேலும் புற்றுநோய் எந்த வயதினரையும் எந்த நாட்டவரையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது, சுருக்கமாக கூறினால் கலன்களின் வளர்ச்சி இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.
இதற்கு மிக முக்கிய காரணங்களாக புகைத்தல், சில உணவு பழக்கங்கள், சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள், எச். ஐ. வி நோய் தொற்று, சில சமயங்களில் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்பட கூடியதாக காணப்படுகின்றன.
புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்
உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு அல்லது வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர்ச்சியான இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், உணவை விழுங்குவத்தில் சிரமம், உடல் எடையில் திடீர் மாற்றம், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், இயல்புக்கு மாறான இரத்த போக்கு, இரத்த கசிவு போன்றன குறிப்பிட்டப்படுகின்றது.
இந்த அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம். புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும்.
எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடலும் இருந்தால் புற்றுநோய்களில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
புற்றுநோகளில் 30 சதவீததுக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவைகளாகவே இருக்கின்றன.
புகைத்தலை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளல், உடற்பயிற்சி செய்தல், மது மற்றும் ஏனைய போதை பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்கள் மூலம் புற்றுநோக்கான 30 சதவீத வாய்ப்புகளை தவிர்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |