உடல் எடையை கடகடவென குறைக்கனுமா? இந்த ஒரே ஒரு கஞ்சியை சாப்பிட்டால் போதும்
உடல் எடையை குறைக்க உதவும் வெஜிடபுள் பார்லி கஞ்சி எவ்வாறு செய்வது என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பார்லி கஞ்சி
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரித்து பலரும் சிரமத்தில் காணப்படுகின்றனர். மேலும் எடையைக் குறைப்பதற்கும், கடுமையான டயட் முறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்ல சத்தான மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் உணவினை தெரிவு செய்து சமைத்து சாப்பிட்டாலே எடையை எளிதாக குறைக்கலாம்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பார்லி கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பார்லி அரிசி - 100 கிராம்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
பட்டாணி - 1/4 கப்
ஸ்வீட் கார்ன் - 1 கையளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 1
சுடுநீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை
பார்லி அரிசியை நன்றாக கழுவிய பின்பு, அதனை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்பு வடிகட்டி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
சற்று வதங்கிய பின்பு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கேரட் மற்றும் பீன்ஸ், பட்டாணி, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின்பு கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள பார்லியை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
சுமார் 3-4 விசில் விட்டு அதனை இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை மற்றும் மிளகு தூள், சுடு தண்ணீர் சேர்த்து பருகினால் சுவை அட்டகாசமாக இருப்பதுடன், உடல் எடையும் கடகடவென குறையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |