வீட்டில் இடியப்பம் இருக்கா? அப்போ இந்த திருநெல்வேலி சொதி செய்து பாருங்க
பல வித உணவுகளை அதற்கேற்ற கைட்டிஷ் சரியாக இருந்தால் சுவையாக சாப்பிடலாம். பொதுவாக இட்லி தொசை இருந்தால் அதற்கு சட்னி தொக்கு தான் மிகவும் சுவையாக இருக்கும்.
இதே போல தான் இடியப்பம் நீராவியில் அவித்து எடுக்கும் ஒரு உணவு. இது அரிசி மாவில் தயாரிக்கப்படுகிறது.
இந்த இடியப்பத்திற்கு மிகவும் பொருத்தமான திருநெல்வேலி சொதி மிகவும் சூப்பராக இருக்கும். இதை செய்யும் முறையை இன்று உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையானப் பொருட்கள்
- தேங்காய் – 1
- பாசி பருப்பு – கைப்பிடியளவு
- கேரட் – 1
- பீன்ஸ் – 5
- பச்சை பட்டாணி – கைப்பிடியளவு
- உருளைக்கிழங்கு – 1
- முருங்கைக்காய் – 1
- இஞ்சி – கால் இன்ச்
- பச்சை மிளகாய் – 2
- சின்ன வெங்காயம் – 10
- பூண்டு – 10 பல்
- வர மிளகாய் – 2
- எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
- உளுந்து – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
பாசிபருப்பை நன்றாக அலசி குக்கரில் போட்டு அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காயில் முதல் பாலையும் இரண்டாம் பாலையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்து காய்கறிகளையும் நீளமாக வெட்டி வைக்கவேண்டும்.
இதன் பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பட்டாணி, நறுக்கிய காய்கறிகளை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவேண்டும்.
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, சீரகம், உளுந்து போட்டு தாளித்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து, காய்கறிகள், உப்பு மற்றும் வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மசித்து அதனுடன் நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள். பின்னர் இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவேண்டும்.
அதிகமாக கொதிக்க விட கூடாது. அதை பக்குவமாக இறக்கி வைத்து இறக்கியுவுடன் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிடவேண்டும்.
இதை ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அள்ளும். சாதத்தோடு சேர்த்து ஏதாவது துவையல் சோத்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |