உருளைக்கிழங்கு வறுவல் இப்படி காரமா செய்து கொடுங்க.. சும்மா சுவை அல்லும்.
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு காய்கறி. உருளைக்கிழங்கு, சாதம், சப்பாத்தி உட்பட பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது கருதப்படுகிறது. உருளைக்கிழங்கு இந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 3
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1.5 ஸ்பூன்
கடலை மாவு - 1.5 ஸ்பூன்

செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த உருளைக்கிழங்கை நன்கு கழுவி பின் அதை குக்கரில் வேக வைக்க வேண்டும். பின் அதை பொடி துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் கடுகு, உளுந்து, கடலைபருப்பு சேர்த்து நன்கு தாளிக்கவும். பின் நாம் கலந்து வைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கிய பின் நாம் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
தண்ணீர் வற்றிய பின் சிறிது பெருங்காயத்தூள் சேரத்து இறக்கினால் சுவைாயன மற்றும் காரசாரமான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |