சுவையான பட்டாணி பட்டர் மசாலா எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான பட்டாணி பட்டர் மசாலா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பச்சை பட்டாணி
சத்துக்கள் அதிகம் கொண்ட காய்களில் ஒன்று தான் பச்சை பட்டாணி. இவை அந்தந்த பருவத்திற்கு மட்டுமே வரும் என்பதால் இதன் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது.
அந்த வகையில் தற்போது விலை சற்று குறைவாக விற்கப்படும் பச்சை பட்டாணியினை வைத்து சுவைாயன பட்டாணி பட்டர் மசாலா எவ்வாறு செய்யலாம் என்று இங்கு கீழே காண்போம்.

தேவையான பொருட்கள்:
ஊற வைத்த பட்டாணி - 1 கப்
அரைக்க:
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 3

தாளிக்க:
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
ஃப்ரெஷ் க்ரீம் (Fresh cream) - சிறிதளவு
செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த பட்டாணியை இரவே ஊற வைத்து விட வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது நன்கு சூடானதும் பட்டைஈ சீரகம் மற்றும் வெந்தம் சேர்த்து வதக்கவும்.
அது நன்கு வதக்கியவுடன் அதை ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின் அதே ஜாரில் தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் அதில் அரைத்து வைத்த தக்காளி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்கவும். பின்பு அதில் இஞ்சி-பூண்டு விழுது, மல்லித் தூள், மிளகாய் தூள், சிறிதளவு சர்க்கரை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
இவை நன்கு கிளறி விட்ட பின்பு நாம் ஊற வைத்திருந்து பட்டாணியை சேர்த்து கிளறி விட்டு சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பட்டாணி பட்டர் மசாலா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |