மட்டன் மசாலா இப்படி ஒருக்க செஞ்சு பாருங்க..இட்லி தோசைக்கு சூப்பரா இருக்கும்
சுவையான மட்டன் மசாலா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மட்டன் மசாலா
பொதுவாகவே பெரும்பாலான மக்கள் சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக விரும்புகின்றனர்.
அதிலும் ஞாயிற்று கிழமை என்றால் அனைத்து வீடுகளிலும் அசைவம் கட்டாயம் இருக்கின்றது. அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு தான் மட்டன்.

மட்டனை குழம்பாக வைத்து சாப்பிடும் நாம் அதனை சற்று வித்தியாசமான முறையில்மட்டன் மசாலா செய்து சாப்பிடலாம். இவை இட்லி தோசைக்கு அசத்தல் சுவையுடன் காணப்படும்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு
மட்டன் - 1/2 கிலோ
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
வரமிளகாய் - 5
பிரியாணி இலை - 2
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாசிப்பூ - 1/2
கல்பாசி - 2 துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - 1 கப்

மசாலா பொடிகள்
கிச்சன் கிங் மசாலா - 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பிற பொருட்கள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, மிளகு, சீரகம் மற்றும் தயிரை சேர்க்கவும்.
பின் அத்துடன் காஷ்மிரி மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதை 5 முதல் 6 விசில் வரை விட்டு அதை வேக வைக்க வேண்டும்.
அது நன்கு வெந்ததும் குக்கரை திறந்து நன்கு கிளறி விட வேண்டும். அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதில் நாம் வேக வைத்த மட்டனை சேர்த்து கிளறி விட்டு சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் மசாலா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |