ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... ரெசிபி இதோ !
குழம்பிற்கு தாராள சுவையினை தரும் முரல் மீனில் மண்சட்டி வைத்து கிராமத்து சுவையில் ஊரை மணக்க இந்த முறையில் முயல் மீன் குழம்பு சமைச்சு சாப்பிடுங்க.
முரல் மீனானது பல வித ஆரோக்கியத்தினை உடலுக்கு தருகிறது. பல மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளதால் பலரும் முரல் மீனை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். முரல் மீன் பொறித்து சாப்பிடுவதை காட்டிலும் குழம்பிற்கு சுவை சூப்பராக இருக்கும். ஊரே மனக்கும் மனத்துடன் முரல் மீன் குழம்பு வைக்கனுமா, இந்த முறையில் சமைச்சு பாருங்கள்.

தேவையான பொருட்கள்;-முரல்மீன், தக்காளி, புளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், குழம்பு மிளகாய்த்தூள், தேங்காய், வெந்தயம், சீரகம், சோம்பு, வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலை, கொத்தமல்லி, நல்லெண்ணெய்,

செய்முறை;-முரல்மீன் செதில்களை நீக்கி துண்டு துண்டாக வெட்டி எடுத்து வைக்கவும். நான்கு தக்காளியை நறுக்கி அதனை பிசைந்து கொண்டு எழுமிச்சை பழம் அளவு புளி எடுத்து புளி கரைசலை ஊற்றி கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ளவும்.
தேங்காய் துண்டு துண்டாக வெட்டி மிக்ஸியில் போட்டு சீரகம், சோம்பு மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்துக் கொண்டு அடுப்பில் எண்ணெய் ஊற்றி விட்டு தாளித்து கொள்ளவும்.

மீன் குழம்புக்கு சுவையை தூக்கி கொடுக்கும் மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி விட்டு எண்ணெய் மிதமான சூட்டிற்கு வந்தவுடன் வெந்தயம், சீரகம், சோம்பு, ஜந்து பல் பூண்டு இடித்து சேர்த்து பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொண்டு நன்றாக வதக்கி கொண்டு மனம் வரும்போது அதில் பெரிய வெங்காயத்தினை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
இதனுடன் தயார் செய்து வைத்த புளிக்கரைசல் மற்றும் தேங்காய் கரைசலை ஊற்றி விட்டு நன்றாக கிளறி கொண்டு மிதமான சூட்டில் அடுப்பினை வைத்து 15 நிமிடம் வரை கொதிக்க விடவும். கொதித்த பின் மீன் துண்டுகளை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்தால் எண்ணெய் மிதக்க மிதக்க ஊரே மனக்கும் மனத்துடன் முரல் மூன் குழம்பு ரெடியாகி இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |