சுவையான கொங்குநாடு சிக்கன் வறுவல் எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சிக்கன் வறுவல்
இன்று சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். அசைவ பிரியர்களின் பிடித்த உணவாக சிக்கன் இருக்கின்றது.
வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் அசைவ விருந்தை தான் பெரும்பாலான நபர்கள் வழங்குகின்றனர். அந்த வகையில் சிக்கனில் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் சுக்கா போன்றவற்றை சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் இதைவிட சிறந்த முறையில் கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க:
2 இன்ச் இலவங்கப்பட்டை
1 ஸ்பூன் மிளகு
3 மேசைக்கரண்டி தனியா விதை
1/2 ஸ்பூன் சோம்பு
1/2 ஸ்பூன் கசகசா
10 வர மிளகாய்
5 ஸ்பூன் தேங்காய்

சிக்கனை சமைக்க:
அரை கிலோ சிக்கன்
2 ஸ்பூன் எண்ணெய்
1 பெரிய வெங்காயம்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
1/2 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
முதலில் நாம் வாங்கிட்டு வந்த சிக்கனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் கடாயில் பட்டை, கிராம்பு, மிளகு, தனியா, சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அத்துடன் தேங்காய் மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும். இதை நன்கு ஆற விட்டு ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அது நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். பின் அத்துடன் கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும். பின் நாம் அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தண்ணீர் வற்றியவுடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து வதக்கினால் சுவைாயன கொங்குநாடு ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |