காரசார நண்டு குழம்பு... பாரம்பரிய சுவையில் இப்படி செய்து பாருங்க
சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை வதக்கி அரைத்து தயாரிக்கும் இந்த காரசாரமான நண்டு குழம்பு சுவையினை அள்ளித்தரும்.
கடல் உணவுகளில் தனித்துவமான சுவையும், மணமும் கொண்டது நண்டு. சரியான மசாலா கலவையுடன் மண் சட்டியில் சமைத்தால் அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை வதக்கி அரைத்து தயாரிக்கும் இந்த காரசாரமான நண்டு குழம்பு சுவையினை அள்ளித்தரும். எளிய முறையில் அனைவரையும் கவரும் சுவையில் நண்டு குழம்பை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்
வெள்ளை பூண்டு
தக்காளி
இஞ்சி
கல் உப்பு
சோம்பு
கருவேப்பிலை
கொத்தமல்லி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லி தூள்
நைஸ் உப்பு
மிளகு தூள்

செய்முறை
குழம்பு வைக்க கடாய் அல்லது மண் சட்டி எடுத்து வைத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தோல் நீக்கிய 25 சின்ன வெங்காயம் மற்றும் 2 பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
20 பல் வெள்ளைப்பூண்டு, பெரிய அளவிலான இஞ்சியை பொடிதாக நறுக்கி கொண்டு, இரண்டு பெரிய தக்காளியை சேர்த்து கொண்டு அதில் கல் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கியபின் சூடு தணிவதற்கு தனியாக எடுத்து வைக்கவும்.

சூடு ஆறியபின் மிக்ஸியில் போட்டு அரைத்து கொண்டு, மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, 20 சின்ன வெங்காயம், கைப்புடி அளவு கருவேப்பிலை சேர்த்து விட்டு நன்றாக வதக்கி கொண்டு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா மீது, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் மல்லி தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நண்டினை சேர்த்து கொதிக்கவிடவும். நண்டு வெந்துவிட்டால் சிவப்பு நிறத்திற்கு அதன் ஓடுமாறும் அப்போது கொஞ்சம் மிளகுதூள் மற்றும் கை அளவிற்கு கொத்தமல்லி சேர்த்து எடுத்தால் காரசாரமான சுவையில் அசத்தும் மனத்துடன் நண்டு குழம்பு ரெடி...
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |