வாரத்திற்கு 3 முறை இந்த கஞ்சியை எடுத்துக்கோங்க... உடல் எடையை கடகடவென குறைக்கலாம்
ராகி பயறு கஞ்சியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து, கஞ்சி எவ்வாறு தயார் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். எடையைக் குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு அதிகமாக கடைபிடித்து வருகின்றனர்.
உடலுக்கு ஆரோக்கிய நன்மையை அளிப்பதில் ராகி உதவியாக இருக்கின்றது. ராகியுடன் பச்சை பயறு சேர்த்து கஞ்சி தயாரித்து சாப்பிடுவதால் உடல்எடையை விரைவில் குறைக்க முடியும்.
வாரத்திற்கு மூன்று முறை ராகி பச்சை பயறு கஞ்சியை குடிப்பதால் உடல் எடையும ்விரைவாக குறையுமாம். அந்த வகையில் ராகி பச்சை பயறு கஞ்சி எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை பயறு - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
பூண்டு - 2பல்
கஞ்சி செய்வதற்கு
ராகி மாவு - 1/4 கப்
தண்ணீர் - 1 கப் + 3 கப்
உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 3/4 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 1
செய்முறை
பவுல் ஒன்றில் வெந்தயத்தை நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதே போன்று மற்றொரு கிண்ணத்தில் பச்சை பயிறை கழுவி, 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
இவற்றினை குக்கரில் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். பின்பு கிண்ணத்தில் ராகி மாவை எடுத்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் 3 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சூடானதும், கரைத்து வைத்த ராகி மாவை ஊற்றி கிளறவும்.

ராகி மாவு நன்றாக வெந்து வந்த பின்பு, அதில் வேக வைத்து பருப்புகளை தண்ணீருடன் சேர்த்து 8 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்கவும். பின்பு அரைத்ததை ராகியுடன் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து கஞ்சியில் ஊற்றினால் அருமையான ராகி பச்சை பயறு கஞ்சி தயார். கடைசியாக சிறிதளவு துருவிய தேங்காயை சேர்த்து பரிமாறவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |