சுவையான பனீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பனீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கின்றது. கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அசைவ பிரியர்களின் புரதச்சத்தை பூர்த்தி செய்வதற்கு பனீர் மிகவும் உதவியாக இருக்கின்றது. பனீரை பல வகைகளில் சமைத்து சாப்பிடும் நிலையில், பனீர் பட்டர் மசாலா பலரது விருப்ப தெரிவாக இருக்கின்றது.

பனீர் பட்டர் மசாலா
முதலில் பனீர் துண்டுகளை லேசாக வறுக்கவும்.ஒரு வாணலியில் பட்டர் மற்றும் சிறிது எண்ணெயைச் சூடாக்கவும்.
இப்போது வெங்காயம். இஞ்சி,புண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு சமைக்கவும், பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றம் கரம் மசாலா சேர்த்துக் கலக்கவும்.

இப்போது கிரேவியை க்ரீமியாக மாற்ற இதனுடன் க்ரீமைச் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து, கிரேவியின் பக்குவத்தைச் சரிசெய்யவும்.
இப்போது பனீர் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும்.அதன் மேல் கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவவும்.