கேரளா ஸ்டைலில் சிக்கன் வறுவல்.... சுவை தாறுமாறாக இருக்குமாம்
Palakkad Chicken Fry: அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான பாலக்காடு சிக்கன் ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாக சிக்கன் இருக்கின்றது. சிறு குழந்தைகளும் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர்.
சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு, சில்லி சிக்கன், சுக்கா என்று தான் நமது வீட்டில் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாலக்காடு ஸ்டைலில் சிக்கன் அவ்வளவாக நாம் சமைத்திருக்க மாட்டோம்.
குறிப்பாக கேரள அசைவ உணவுகள் என்றால் அதற்கு தனி சுவையும், மனதில் தனி இடமும் இருக்கும். தற்போது பாலக்காடு ஸ்டைலில் சிக்கன் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்கத் தேவையானவை
சின்ன வெங்காயம் - 15
வர மிளகாய் - 5
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
[5NKNM9[
செய்முறை
முதலில் சிக்கனை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாய் ஒன்றில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சின்னவெங்காயம், வரமிளகாய் சேர்த்து ஒரு வதக்கி அதனை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.
பின்பு அதே கடாயில் மசாலாப் பொடியை ஒவ்வொன்றாக சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

மேலும் கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து அரை பதத்திற்கு வேக வைத்து, பின்னர் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
பின்பு மூடி வைத்து ஒரு 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்றாக வெந்ததும் அடுப்பினை அணைத்துவிட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும். தற்போது சுவையான பாலக்காடு சிக்கன் ரெசிபி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |