உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீங்களா? ஓட்ஸை புட்டாக செய்து சாப்பிடுங்க
உடல் எடையைக் குறைக்க உதவும் ஓட்ஸை புட்டாக எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் டயட் என்ற பெயரில் பல உணவு கட்டுப்பாட்டையும் செய்கின்றனர்.
நாம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமெனில் சத்தான உணவை தேர்ந்தெடுப்பதுடன், நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் எடையை குறைப்பதற்கு உதவும் உணவில் ஓட்ஸ் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஓட்ஸை எப்பொழுதும் போன்று சாப்பிடாமல் அதனை புட்டாக செய்து சாப்பிட்டால் வித்தியாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
துருவிய தேங்காய் - தேவைக்கேற்ப
வெல்லம் - இனிப்பிற்கேற்ப
முந்திரி - 5 - 7
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 3 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
முதலில் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் அடித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு தண்ணீர் சிறிதளவு சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தினை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதனுள் இட்லி தட்டை வைத்து ஓட்ஸ் கலவையை இட்லி தட்டில் வைத்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.
அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கட்டியாக பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து, முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
பின்பு ஓட்ஸில் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து அதனுடன் காய்ச்சி வைத்த வெல்ல பாகை ஊற்றி கிளறவும். பின்பு முந்திரி தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் கலந்து கடைசியாக தட்டில் பரிமறினால் ஓட்ஸ் புட்டு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |