கோழி குழம்பு தேங்காய் பால் சேர்த்து இப்படி செய்து பாருங்க! சுவை வேற லெவல்ல இருக்குமாம்
அசைவ பிரியர்களுக்கு பிடித்த சிக்கனில் தோங்காய் பால் கோழி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிக்கன்
பெரும்பாலான அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளது சிக்கன் ஆகும். சிக்கனை பல வகைகளில் சமைப்பது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சிக்கன் வகைகள் பிடிக்கும் நிலையில், சில வகைகள் சமைப்பதற்கு மிகவும் கஷ்டமாக தோன்றும்.
அந்த வகையில் மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் செய்யக்கூடிய தேங்காய் பால் கோழி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
.

தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு
1/4 அங்குல பட்டை
4 கிராம்பு
1 ஏலக்காய்
1/2 ஸ்பூன் சோம்பு
1/4 ஸ்பூன் சீரகம்
10 மிளகு
4 பல் பூண்டு
1 அங்குல இஞ்சி துண்டு
6 காரமான பச்சை மிளகாய்
1/4 கப் தண்ணீர்
தாளிப்பதற்கு
1 கிலோ சிக்கன்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
3 பிரியாணி இலை
சிறிதளவு கல்பாசி
1 தேக்கரண்டி சீரகம்
1 கொத்து கறிவேப்பிலை
1 கப் நறுக்கிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
1/4 கப் புதினா இலைகள்
2 ஸ்பூன் கொத்தமல்லி இலை
1/4 கப் நறுக்கிய தக்காளி
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 கப் தண்ணீர்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
தேங்காய் பால் எடுப்பதற்கு
1 கப் துருவிய தேங்காய்
1 ஸ்பூன் கசகசா
4 முந்திரி பருப்பு
1 கப் தண்ணீர்

செய்முறை
அரைப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். பின்பு கசகச மற்றும் முந்திரியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கி, பின்பு அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து சிறிது வதக்கிய பின்பு சிக்களை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிவிட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்.
குழம்பு நன்றாக கொதித்து வந்த பின்பு தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். கடைசியாக சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றுமு் கறிவேப்பிலை தூவி இறக்கினால் தேங்காய்பால் கோழிகுழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |