முகப்பருக்களை ஒரே இரவில் மாயமாக்கும் ஃபேஸ் பேக்! எப்படி தயாரிப்பது?
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட வீணாக்கிவிடுகின்றார்கள்.
அதிலும் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் பிரச்சினைதான்.
இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகவே பார்க்கப்படுகின்றது.
இப்படி முகத்தின் அழகை மொத்தமாக கெடுக்கும் இந்த முகப்பருக்களைப் போக்குவதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு அருமையான ஃபேஸ் பேக்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேப்ப இலை - ½ கப்
தண்ணீர் - 1 முதல் 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி
வேப்பிலை ஃபேஸ் செய்முறை
முதலில் வேப்ப இலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தயார் செய்துள்ள இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்றாக முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவிட வேண்டும்.
பின்னர் சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரையில் அப்படியே காயவிட்டு, சாதாரண நீரில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவினால் முகப்பரு உட்பல சில சரும பிரச்சனைகளில் இருந்தும் முழுமையாக விடுபடலாம்.
வேப்பபிலை காரணமாக உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பின்னரே இதனை பயன்படுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |