பக்ரீத் பண்டிகை ஸ்பெஷல்... சுவையான மட்டன் வடை செய்வது எப்படி?
இந்த பக்ரீத் பண்டிகையில் பிரியாணி மட்டுமின்றி, சில உணவுகளும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இப்பதிவில் சுவையான மட்டன் வடை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.. பக்ரீத் பண்டிகை ஜூலை 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை என்றவுடன் நம் அனைவருக்கும் கண் முன் வருவது பிரியாணி தான். ஆனால் அதற்கு ஈடு சுவையாக மட்டன் வடை எப்படி செய்யலாம் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி -1 கப் பெருங்காயம் -1/4 ஸ்பூன் பூண்டு பேஸ்ட் -1/2 ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் -1 ஸ்பூன் மட்டன் கீமா -200 கிராம் கடலை மாவு -2 ஸ்பூன் கடலை பருப்பு -1/2 கப் பெருஞ்சீரகம் -2 ஸ்பூன் சீரகம் -1 ஸ்பூன் வெங்காயம் - பொடிசாக நறுக்கியது 1 கரம் மசாலா -1 ஸ்பூன் மிளகாய் பொடி - 2 டீஸ்புன் கறிவேப்பிலை இலை, உப்பு -தேவையான அளவு
செய்முறை விளக்கம்
முதலில் பெருஞ்சீரகம், கடலை பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் போன்றவற்றை ஈரமில்லாத ஒரு பெரிய கிண்ணம் எடுத்து அதில் ஒன்றாக சேர்த்து கொள்ளளவும்.
இதனையடுத்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு 45 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி மிக்சியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மட்டனை வெட்டி எடுத்து கொண்டு, நன்றாக மிக்சியில் அல்லது கிரைண்டரில் அரைத்து கொள்ளவும்.
அதன் பிறகு, அதனுடன் கடலை மாவு, பெருங்காயம், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து பிசையவும். கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு ஆகியவற்றை ஈரமில்லாத வேறு ஒரு கிண்ணத்தில் சேர்த்து பிசையவும்.
பின் 2 மற்றும் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தற்போது, வடை தட்டுவது போல் உருண்டையாக மாவு எடுத்து தட்டையாக அழுத்தி எடுக்கவும்.
வடை போடுவது போல் வாணலியில் எண்ணெய் ஊற்றி கோல்டன் நிறத்தில் வரும் வரை இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
அதிக எண்ணெய்யை எடுத்துவிட்டால் போதும், சுவையான மட்டன் வடை ரெடி...