அட்டகாசமான சுவையில் பாசிபருப்பு அல்வா... வெறும் அரை கப் பருப்பு இருந்தாலே போதும்
அட்டகாசமான சுவையில் பாசிபருப்பு அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாலை நேரம் வந்துவிட்டாலே எதாவது வித்தியாசமான இனிப்பு வகைகளை குழந்தைகள் செய்து தர கூறுவார்கள்.
மேலும் என்னதான் வயிறு நிரம்ப சாப்பிட்டாலும், இனிப்பு ஒன்றினை வாயில் போட்டால் சிலருக்கு திருப்தியாக உணர்வார்கள்.
அவ்வாறு நினைக்கும் நபர்களுக்கு ஆரோக்கியமான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/2 கப்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 15
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
செய்முறை
பாசி பருப்பை நீரில் 2 முறை கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் போட்டு ஒன்றரை கப்பு தண்ணீர் ஊற்றி 2 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.
பின்பு குறித்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 4 ஸ்பூன் நெய் விட்டு, முந்திரி பருப்பினை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள பாசிபருப்பை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறிவிட்டு வேக வைக்கவும்.
இதனுடன் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பின்பு மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
சிறிதளவு கேசரி பவுடரை எடுத்து நீரில் கரைத்து ஊற்றிவிடவும். பின்பு வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும். கடைசியாக வறுத்த முந்திரி மீதமுள்ள நெய் இவற்றினை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பாசிபருப்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
