கோவாக்காயில் சட்னி ஆந்திரா பாணியில் இப்படி செய்து அசத்துங்க
சட்னி என்றால் அது பல வகைகளில் செய்யப்படும் ஒரு உணவாகும். நாம் எமது ஸ்டைலில் எப்போதும் போல வைத்து சாப்பிடுவோம். இந்த சட்னி இட்லி தோசைகளுக்கு தான் அதிகமாக செய்வார்கள்.
ஆனால் ஆந்திரா பாணியில் செய்யப்படும் உணவுகள் எப்போதும் சுவை பிரமாதமாக இருக்கும். எனவே தான் இந்த பதிவில் ஆந்திரா பாணியில் சட்னி செய்து பார்க்கலாம்.
இந்த முறையில் சட்னி செய்யும் போது வீட்டில் இருப்பவர்கள் வெறுப்பு இல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். இது இட்லி தோசை மட்டுமல்லாமல் சூடான சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம். இந்த பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் கோவைக்காய் சட்னி செய்முறையை அறியலாம்.
தேவையானப் பொருட்கள்
- 250 கிராம் கோவைக்காய்
- 10 பச்சை மிளகாய்
- புளி சிறிதளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/4 கப் பச்சை கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
வறுத்து அரைக்க
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
தாளிக்க
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 வர மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் முதலில் தாளிக்க தேவையான பொருட்களை நன்கு வாசனை வரும் வரை வதக்க வேண்டும். முதலில் வெந்தயத்தை கருகாமல் வறுத்து விட்டு, பின்னர் கடுகு, உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பின்னர் சீரகம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து அடுப்பிலிருந்து இறக்கி வேறாக்கி வைக்கவும். மசாலா நன்கு குளிர்ந்த பிறகு அதை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய கோவைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை மூடி வைத்து காய்கறி நன்கு வேகும் வரை வதக்கவும்.
பின்னபா புளி சேர்த்து 30 விநாடிகள் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். மிக்ஸியில் ஏற்பனவே வறுத்த கோவைக்காய் மற்றும் பச்சை மிளகாய் மற்றும் மென்மையாக அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடாக அரைக்கவும்.
மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். இறுதியாக ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
இந்த சட்னியை சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதை இட்லி, தோசையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். காலையில் வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் என எல்லோருடைய சுவைக்கும் ஏற்ற சட்னியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |