வீட்டில் கொள்ளு இருக்கா? அப்போ இப்படி தோசை செய்ங்க
உணவென்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எமை நாம் சாப்பிடாவிட்டாலும் காலை உணவை ஒரு போதும் விட கூடாது. தானியங்கள் எவ்வளவு உண்டாலும் அவை நமக்கு நன்மை மட்டுமே அள்ளித்தரும்.
நாம் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை தரும். கொள்ளு என்பது ஒரு தானிய வகையை சேர்ந்தது.
இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் தொடங்கி எடையைக் குறைப்பது வரை கொள்ளு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும்.
இத்தனை நன்மைகளு் படைத்த கொள்ளில் எப்படி தோசை செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- 2 கப் இட்லி அரிசி
- 2 கப் கொள்ளு
- 1/4 கப் உளுத்தம்பருப்பு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம் விதைகள்
- 6 சிவப்பு மிளகாய்
- 10 சிறிய வெங்காயம் அல்லது ஒரு பெரிய வெங்காயம்
- 1 அங்குல இஞ்சி
- 5 பூண்டு பல்
- உப்பு தேவையான அளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்
செய்முறை
முதலில் இட்லி அரிசி, கொள்ளு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் வர மிளகாய், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைக்கவும். இதை தோசை மாவு பதத்திற்கு வரும்வரை மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைக்கும் போது இடையில் சுமார் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இந்த மாவை குறைந்தது 4-5 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்தன் பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசைக்கு ஊற்றவும்.
பின்னர் உங்களுக்கு விரும்பினால் நெய் அல்லது எண்ணெய் சுற்றிவர ஊற்றி வேகவைத்து எடுக்கலாம் இப்படி எடுத்தால் தொறுதொறுப்பான கொள்ளு தோசை தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |