கேரளா ஸ்டைலில் அட்டகாசமான சிக்கன் ரோஸ்ட்... சுலபமா செய்வது எப்படி?
சுவையான கேரளா ஸ்டைல் மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சிக்கன்
அசைவ பிரியர்களுக்கு அதிகமாக பிடித்த உணவுகளில் ஒன்று தான் சிக்கன் ஆகும். சிக்கனை பல வகைகளில் நாம் சமைத்து சாப்பிடுகின்றோம்.
குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த சிக்கனை பிரியாணி, கிரேவி, சுக்கா, சிக்கன் 65 என சமைத்து கொடுத்துள்ள நாம் கேரளா ஸ்டைலில் சமைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆம் கேரளா ஸ்டைலில் மலபார் சிக்கன் ரோஸ்ட் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் மரினேட் செய்ய
சிக்கன் லெக் பீஸ் - 6
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மற்ற பொருட்கள்
சின்ன வெங்காயம் - 25
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
நாம் வாங்கி வைத்துள்ள லெக் பீஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து கத்தியால் வைத்து ஆங்காங்கே கீறிக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகு தூள் சோள மாவு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து குறித்த சிக்கனை பொரித்து எடுக்கவும்.

பின்பு அதே கடாயினை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பொரித்த சிக்கனை சேர்க்கவும். இவற்றினை நன்றாக கிளறி விட்ட பின்பு, சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் மலபார் சிக்கன் ரோஸ்ட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |