வீடுகளிலே எளிதாக இயற்கையான பன்னீர் தயாரிக்கலாம்.. எப்படி தெரியுமா?
பன்னீர் என்பது எல்லோருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவதற்கு பன்னீர் ஒரு நல்ல மாற்றமான சத்தான உணவாகவும் இருக்கிறது. அந்த வகையில், வீடுகளிலேயே தண்ணீர் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தயாரிக்கும் முறை:
அடிகனமான பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி மிதமான தீயில் நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு பால் பொங்கி வரும் பொழுது தீயை குறைத்து விட்டு எலுமிச்சை சாற்றுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து அதனை மெதுவாக பாலில் ஊற்ற வேண்டும்.

அவ்வாறு ஊற்றும் பொழுது பால் திரிந்து நீரும் பன்னீரும் தனித்தனியாக பிரியும் வரை நன்றாக கிளற வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணி எடுத்துக் கொண்டு திரிந்த அந்த பாலை ஊற்றி நன்றாக வடிகட்ட வேண்டும். பின்னர், பன்னீர் மீது சாதாரண குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும்.
இதனால் எலுமிச்சை சாற்றில் இருந்த புளிப்புத் தன்மை விலகும். பிறகு துணியை சேர்த்து நன்றாக பிழிந்து அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

அதோடு, துணியை கட்டி ஒரு தட்டையான பாத்திரத்தின் மேல் வைத்து அதன் மீது ஒரு கனமான பொருளை சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.
பிறகு பன்னீர் நன்றாக உறைந்ததும் துணியை அகற்றிவிட்டு உங்களுக்கு பிடித்த வடிவில் அந்த பன்னீரை துண்டுகளாக வெட்டி பயன்படுத்தலாம். சுவையான பன்னீர் இயற்கையான முறையில் வீடுகளில் தயார்.