காலை உணவிற்கு சத்தான ரவா இட்லி.... வெறும் 10 நிமிஷம் போதும்
காலை உணவிற்கு சத்தான, ஆரோக்கியம் நிறைந்த ரவா இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரவா இட்லி
பொதுவாக காலையில் இட்லி, தோசை இவற்றினை அரிசி மாவில் செய்து சாப்பிடுவதை தான் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சற்று வித்தியாசமாக சுவையான ரவா இட்லியை செய்து சாப்பிடலாம்.
நாம் புதிதாக தொடங்கும் நாளில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமெனில் காலை உணவு மிகவும் முக்கியம் ஆகும். காலை உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் நிச்சயம் இருக்க வேண்டும்.
அந்த வகையில் சத்தான ரவை இட்லியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
புளித்த தயிர் - 1/2 கப்
துருவிய கேரட் - 1 கப்
பீன்ஸ் - 10
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துண்டு - 1
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை மற்றும் பொடிய நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றினை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட் சேர்த்து வதக்கி கடைசியாக, பேக்கிங் சோட மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்பு இதில் ரவை சேர்த்து மசாலாக்கள் ரவையுடன் சேரும்படி மிதமான தீயில் நன்றாக கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். இவை நன்கு ஆறியதும், புளித்த அல்லது கெட்டியான தயிர் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து எப்பொழுதும் போல் இட்லி தட்டில் மாவை ஊற்றி, வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |