காலை உணவிற்கு ஆரோக்கியம் நிறைந்த சுவையான ரவா இட்லி செய்வது எப்படி.? ரெசிபி இதோ
ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லியை காலை செய்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...
காலை வேளையில் எளிதான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு அந்த நாளை தொடங்க தான் பலர் விரும்புவார்கள். பொதுவாக காலையில் இட்லி, தோசை, உப்புமா என செய்து சாப்பிடுவது தான் வழக்கம். அதுதான் இல்லத்தரசிகளுக்கு காலை வேளையில் செய்ய எளிதாக இருக்கும்.
ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லியை காலை செய்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...

தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்
புளித்த தயிர் - 1/2 கப்
துருவிய கேரட் - 1 கப்
பீன்ஸ் - 10
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி துண்டு - 1
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி இறுதியாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி கொள்ளவும்.

பின்னர் அதில் ரவை சேர்த்து மசாலாக்கள் ரவையுடன் நன்கு சேரும் படி மிதமான தீயில் கைவிடாமல் கிளறி ரவை வறுபட்ட வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி அதை நன்றாக ஆறவிடவும்.
இவை நன்கு ஆறியவுடன் புளித்த தயிர் அல்லது கெட்டியான தயிர் சேர்த்து கலவையை நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு மூடி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் ரவை தயிரை உள்ளே இழுத்து ஊறி இருக்கும்.
பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். அதன் பின்னர் அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் எப்போதும் போல் இட்லி தட்டில் இந்த மாவை ஊற்றி 15 நிமிடம் வேகவைத்தால் சுவையான ரவா இட்லி ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |