காலை உணவிற்கு ஏற்ற ஜவ்வரிசி உப்புமா... வெறும் 10 நிமிடம் போதுமாம்
சுவையான காலை உணவான ஜவ்வரிசி உப்புமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜவ்வரிசி உப்புமா
காலை எழுந்ததும் ஒரே மாதிரியான காலை உணவை பலரும் விரும்புவதில்லை. சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் தான் பலரும் உணவை எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
அந்த வகையில் மிகவும் சீக்கிரமாக செய்யும் சத்தான உணவை குறித்து தெரிந்து கொள்ளலாம். அதாவது சத்துக்கள் அதிகம் நிறைந்த ஜவ்வரிசியை பாயாசத்திற்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றோம்.
ஆனால் ஜவ்வரிசியில் உப்புமா செய்யவும் முடியும். அந்த வகையில் ஜவ்வரிசி உப்புமா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
ஜவ்வரிசி - 1 கப் (ஊற வைத்தது)
எலுமிச்சை - பாதி
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
தேவையான அளவு ஜவ்வரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி பாத்திரம் ஒன்றில் எடுத்து தனியாக வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு வெட்டி வைத்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும்.

உருளைக்கிழங்கு வதங்கியதும், வறுத்து வைத்த வேர்கடலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு ஊற வைத்து எடுத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து கிளறி வேகவிடவும். கடைசியாக சிறிதளது எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் ஜவ்வரிசி உப்புமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |