உடம்பில் இந்த அறிகுறிகள் தெரிகின்றதா? நீங்கள் ஆரோக்கியமாக இல்லையாம்
நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நோய்கள் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்காக உணவில் கவனம் எடுப்பது, உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை செய்கின்றோம்.
மேலும் அதிகாலையில் ஆரோக்கியமான பானம் எடுத்துக் கொள்வதையும் தற்போது பலரும் பின்பற்றி ஆரோக்கியமான இருந்து வருகின்றனர்.
ஆனால் சில தருணங்களில் நமது உடம்பில் தெரியும் சில அறிகுறிகள் நாம் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்துகின்றது. அந்த வகையில் அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அறிகுறிகளும், ஆரோக்கிய பிரச்சனையும்
நீங்கள் தூங்கி எழும் போது நாக்கில் வெள்ளை படலம் அதிகமாக காணப்பட்டால் உங்களது உடம்பில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அதிகமாவதாக அர்த்தம். கழிவுகளை சுத்தம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடவும்.
இரவில் 8 மணிநேரம் தூங்கி எழுந்த பின்பும் உடல் சோர்வை உணர்வதுடன், புத்துணர்ச்சி இல்லாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்துவதாக அர்த்தமாம்.

உணவு சாப்பிட்ட பின்பு தூங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், உடலில் இன்சுலின் எதிர்ப்பு தொடங்க ஆரம்பித்துள்ளதாக அர்த்தமாம். அதாவது சர்க்கரை நோய் வரப்போவதற்கான அறிகுறியாகும்.
வாய் மற்றும் பற்களை நன்கு சுத்தமாக வைத்தாலும் துர்நாற்றம் வீசுவதை நீங்கள் உணர்ந்தால், அவை குடல் ஆரோக்கியம் இல்லை என்பதை குறிக்கின்றது. ஆதலால் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்வதுடன், தண்ணீர் அதிகமாகவும் குடிக்க வேண்டும்.

காலையில் எழுந்து மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் பித்தம், வாதம் உடம்பில் சமநிலையில் இல்லை என்று அர்த்தமாம். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதுடன், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் இவற்றினை எடுத்துக் கொள்ளவும்.
முகத்தில் பருக்கள் அடிக்கடி வந்தால், உடம்பில் ரத்தம் அசுத்தமாக உள்ளது என்று அர்த்தமாம். ஆதலால் ரத்தத்தினை சுத்தப்படுத்தும் உணவினை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவு சாப்பிட்ட பின்பு மீண்டும், மீண்டும் பசி ஏற்படுவது, இனிப்பு போன்றவற்றினை நள்ளிரவில் எடுத்துக் கொள்ள நினைப்பதும் செரிமான பிரச்சனையை குறிக்கின்றது. செரிமானத்திற்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு உடம்பினை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |