ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க....டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மட்டன் சுக்கா
பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர்.
சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.
தற்போது மட்டன் சுக்கா சற்று வித்தியாசமான முறையில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
மட்டன் மரினேட் செய்ய தேவையானவை:
மட்டன் - 1/2 கிலோ
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தேங்காய் அரைக்க தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்

மற்ற பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2 அல்லது 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 அல்லது 1½ டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாங்கிட்டு வந்த சிக்கனை மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊற வைக்க வேண்டும். பின் பிரஷர் குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும்
பிறகு மட்டனை பிரஷர் குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். பி்ன் ஒரு வா
சிறிதளவு தண்ணீர் ஊற்றி 4 முதல் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். குறிப்பு: மட்டன் மிகவும் மென்மையாக வெந்திருக்க இருக்க வேண்டும்.
தற்போது அடுப்பில் கடாய் வைத்து துருவிய தேங்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும். (விரும்பினால் சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கலாம்.)
தேங்காய் மணம் வரும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பு: மிகவும் பொடியாக அரைக்க வேண்டிய அவசியமில்லை.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, கிராம்பு, சீரகம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு, அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்களைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
தற்போது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்த்து உடனடியாகக் கலக்கவும்.மசாலாக்களின் பச்சை வாசம் போனவுடன் சமைத்த மட்டனை சேர்த்து 5-7 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
பின்னர் அரைத்த தேங்காய் மசாலாவைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தேவையென்றால் சிறிதளவு மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்க்கலாம்.
மட்டனை மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் வறுக்கவும். மசாலாக்கள் மட்டனில் நன்கு ஒட்டிக்கொண்டு, அதிகப்படியான நீர் கிட்டத்தட்ட வற்றும் வரை சமைக்கவும்.
இறுதியாக, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலந்து இரண்டு நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.உங்களுக்குக் கூடுதல் தேங்காய்ச் சுவை வேண்டுமென்றால், கடைசியில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அவ்வளவு தான் இப்போது தேங்காய் போட்ட சூடான மட்டன் சுக்கா தயாராகிவிட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |