வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கபாப் செய்வது எப்படி?..
ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கபாப் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் கொடுப்பதற்கு பெற்றோர்கள் அதிகமாக யோசித்து விதவிதமாக எதாவது ஒன்றினை முயற்சித்து செய்து கொடுகின்றனர்.
அந்த வகையில் சிக்கன் கபாப் ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் கொத்துக்கறி - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
முட்டை - 1
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக கழுவி தனியாக எடுத்து வைக்கவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றினையும், பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியையும் சேர்க்க வேண்டும்.
இதனுடன் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்களையும், கரம்மசாலாவையும் சேர்க்கவும். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, பின்பு 1 முட்டையை அதனுடன் உடைத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனை 20 நிமிடம் மூடி ப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு சிக்கனை எடுத்து நீளவாக்கில் உருட்டி, தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் தட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சிக்கன் கபாப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |