தேங்காய் சட்னியை மிஞ்சும் சுவையில் சுரைக்காய் சட்னி! இட்லி, தோசைக்கு செய்து பாருங்க
இட்லி, தோசைக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை, இரவு டிபன் சாப்பிடுபவர்கள் பல வித சட்னிகளை செய்தும் சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஒருமுறை சுரைக்காயில் சட்னி செய்து பார்த்ததுண்டா?
தேங்காய், தக்காளி சட்னிகள் தோற்றுப்போகும் சுரைக்காய் சட்னியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பிஞ்சு சுரைக்காய் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - சிறிது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தயிர் - 1 டம்ளர்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பிஞ்சு சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சுரைக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் 4 பச்சை மிளகாய், 2 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு சேர்த்து, அனைத்தும் சுருண்டு வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் சீரகத்தை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டம்ளர் தயிரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சற்று அதிகமாக நீரை ஊற்றி, நீர் சட்னி பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சுரைக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |