உடல் எடையை மளமளவென குறைக்க வேண்டுமா? பார்லி கஞ்சியை இந்த மாதிரி செய்து குடிங்க
உடல் எடையைக் குறைப்பதற்கு பார்லி அரிசியை எவ்வாறு கஞ்சி வைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரித்து காணப்படுவதால் பலரும் சிரமத்தில் காணப்படுகின்றனர்.
மேலும் எடையைக் குறைப்பதற்கும், கடுமையான டயட் முறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்ல சத்தான மற்றும் உடல் எடையை குறைக்க தூண்டும் உணவினை தெரிவு செய்து சமைத்து சாப்பிட்டாலே எடையை எளிதாக குறைக்கலாம்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பார்லி கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பார்லி அரிசி - 100 கிராம்
கேரட் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து, பார்லி அரிசியை சேர்த்து ஒரு 2 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை அரைத்து பொடி செய்து தனியாக வைக்கவும். பின்பு அடுப்பில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு 4 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் ஒரு 4 ஸ்பீனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
5-10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பார்லி கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |