கோடை வெயிலுக்கு சிறந்த பானம் கம்பங்கூழ்... எவ்வாறு தயாரிப்பது?
கோடை வெயிலை சமாளிக்க அருமருந்தாக இருக்கும் கம்பங்கூழ் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை வெயில்
கோடை கால வெயிலால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில், மக்கள் உடல் சூட்டை தணிப்பதற்கு இயற்கையான பானங்களை விரும்புகின்றனர்.
உடலை நீரோற்றமாக வைத்துக் கொள்வதற்கு அதிகளவில் தண்ணீர் குடிப்பதுடன், செயற்கை பானங்களை தவிர்த்து இயற்கை பானங்களை பருக வேண்டும்.
அதிலும் பழங்கால உணவாக இருக்கும் கம்பங்கூழ் கோடை காலங்களில் தனி இடத்தினை பிடித்துள்ளது. கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகரத்தில் வாழும் மக்களும் இதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

தேவையான பொருட்கள்
கம்பு - அரைகிலோ
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - கால் லிட்டர்.
செய்முறை
முதலில் கம்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 அல்லது 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊற வைத்த பின்பு கம்பிலிருந்த தண்ணீர் முழுவதையும் வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் அரைத்து வைத்த கம்பை சேர்த்து இடைவிடாமல் கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் கம்பு நன்றாக வேகும்வரை குறைவான தீயில் அடுப்பில் வைக்கவும்.
கம்பு வெந்தததும் அடுப்பை அணைத்து ஆற வைத்து மூடி வைக்கவும். பின்கு காலையில் வேக வைத்த கம்புடன் தயிர், உப்பு சேர்த்து கரைத்து பருகலாம்.
இதற்கு மோர் மிளகாய், சின்ன வெங்காயம், கருவாடு தொக்கு போன்றவற்றினை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாகும்.
இவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன், செரிமானத்தினை மேம்படுத்தி பசியை கட்டுப்படுத்த உதவுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |