இயற்கை முறையில் முகப்பருக்களை தடுப்பது எப்படி?
முகப்பருக்கள் வந்தாலே பெண்கள் எரிச்சலடைவார்கள். அந்த முகப்பருக்களை எப்படி இயற்கை முறையில் சரிசெய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
ரோஸ் வாட்டர்
எண்ணெய் பசை உடையவர்களுக்கு தான் அதிகம் பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனால் சருமத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்ப்பது அவசியம்.
ஒரு நாளைக்கு தினசரி இருமுறையாவது முகத்தை நல்ல தரமான பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக்கொண்டு முகத்தில் மெதுவாக தடவவும் தினசரி இரு முறை இதை செய்தால் முகப்பருவை தடுக்கலாம்.
தயிர் மற்றும் மஞ்சள்
மஞ்சள் மற்றும் தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது.
பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். உபயோகிக்க இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும்.
முகத்தில் சமமாக பூசவும். 15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.
வேப்பிலை
வேப்பிலையானது பல நன்மைகளை கொண்டது. உடலில் உள்ள அனைத்து கிருமி மற்றும் தொற்றுக்களை உடனே அளிக்கும் தன்மை உடையது.
உபயோகிக்க வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அடுத்ததாக, அந்த நீரில் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவ வேண்டும்.
வெள்ளரி சாறு
வெள்ளரி சாறு ஆனது முகத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை கட்டுபடுத்துகிறது. அதன் குளிர்ச்சி தன்மை உங்கள் சருமத்தை குளிர்வித்து ஈரத்தன்மை அளிக்கிறது.
உபயோகிக்கும் போது இரண்டு மேசைக் கரண்டி வெள்ளரிச் சாருடன் ஒரு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பருத்தி பஞ்சு பந்தை இந்த சாறில் முக்கி முகத்தை துடைக்கவும். இது உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும்.