ஒன் சைட் லவ் உங்களை பாடாய்படுத்துதா? இத மட்டும் செய்ங்க
இந்த உலகத்திலேயே மிகவும் அழகான மற்றும் ஆழமான விடயம் என்னவென்று கேட்டால், அது காதல் தான்.
ஆனால், இது இரு தரப்பு காதலாக இருந்தால் அழகானதாக இருக்கும். அதுவே ஒருதலைப்பட்ச காதலாக இருந்தால் அது கொடுக்கும் வலியும் வேதனையும் கூறவே முடியாது.
image - Deposite photos
காதலில் பல வகைகள் உண்டு. சொல்லாத காதல், சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத காதல், காதலித்ததன் பின்னர் விலகுதல் இதுபோன்றன. ஆனால், அனைத்தையும் விட வலி மிகுந்ததுதான் இந்த ஒன் சைட் லவ்.
சிலர் அதிலிருந்து மீண்டு வர இயலாமல் மிகவும் வேதனைப்படுவார்கள். ஆனால், அது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இனி அதிலிருந்து எவ்வாறு மீண்டு வரலாம் என்று பார்ப்போம்...
image - istock
தொடர்பை நிறுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் யாரை நேசித்தீர்களோ, அவர்களிடமிருந்து முற்றிலுமாக விலகிவிடுவதுதான் உங்களுக்கு நல்லது. ஏனென்றால் நீங்கள் அந்த உறவில் அப்படியே தரித்திருந்தால் அதிலிருந்து வெளியேறுவது கடினமாகிவிடும்.
அதுமாத்திரமின்றி சமூக ஊடகங்களில் அவர்களை பின்தொடர்வது, அவர்களின் எண்ணுக்கு அழைப்பெடுப்பது என்பவற்றை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளுங்கள். இது சற்று வேதனையான காரியம் என்றாலும் இதை செய்துதான் ஆகவேண்டும்.
image - The bridal box
எல்லைகளை அமையுங்கள்
உங்களை அவர்கள் தொடர்பு கொள்ள நினைத்தாலும் தான் அதற்கு விரும்பவில்லை என்று உங்களுக்கு நீங்களே எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள்.
உணர்வுகளை அங்கீகரியுங்கள்
முதலில் ஒருதலைக் காதல் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். காலம் எப்பொழுதுமே அனைத்துக்கும் சிறந்த மருந்தாக இருக்கும்.
image - Rediffmail
உங்களை கவனியுங்கள்
உங்களை மகிழ்விக்கும் விடயங்களில் ஈடுபடுங்கள். உடற்பயிற்சி செய்தல், நல்ல ஓய்வு, பிடித்த பொழுதுபோக்கு என உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.