ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு எப்படி மாற்றுவது?
ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு மாற்றுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மொபைலை விட ஐபோன்களைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் முதன்முதலாக ஐபோன் வாங்கியிருப்பவர்கள், ஏற்கனவே பயன்படுத்திய ஆண்ட்ராய்டு போனில் உள்ள டேட்டாக்களை எவ்வாறு மாற்றுவது என்ற குழப்பம் ஏற்படும்.
குறித்த டேட்டாக்களை மூவ் டூ ஐஓஎஸ் என்ற ஆப் மூலம் எவ்வாறு மாற்றலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆண்ட்ராய்டு டூ ஐபோன்
மூவ் டூ ஐஓஎஸ் என்ற ஆப்பை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு மாற்றலாம்.
மீடியா, ஆப்ஸ் மற்றும் பலவற்றை புதிய ஐபோனுக்கு மாற்றமுடியும், ஆனால் SD கார்டில் உள்ள டேட்டாவை மட்டும் இந்த ஆப் மூலம் மாற்ற முடியாது.
மாற்றுவது எப்படி?
‘மூவ் டூ ஐஓஎஸ்’ என்கிற பிரத்யேகஆப் மூலம் ஆண்ட்ராய்ட் யூசர்கள் தங்கள் டேட்டாவை ஒயர்லெஸ் முறையில் ஐபோனுக்கு மாற்ற வழி செய்கிறது.
இதன்மூலம், ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் புகைப்படங்கள், கான்டாக்ட்கள், மெசேஜ்கள் மற்றும் பல்வேறு டேட்டாக்களை தங்களது புதிய ஐபோனுக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் எந்தவொரு முக்கியமான டேட்டாவையும் இழக்காமல் மாற்றிக் கொள்ளலாம்.
உங்களது ஆண்ட்ராய்டு மொபைல் Wifi உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் புதிய ஐபோனையும் அது ஐஓஎஸ்-ன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
இந்த டேட்டா ட்ரான்ஸ்பர் நடந்து முடியும் வரை இரண்டு மொபைல்களையும் சார்ஜிங்கிலேயே வைக்கவும்.
ஆண்ட்ராய்டு போனில் உள்ள டேட்டாக்களை மாற்றுவதற்கு உங்களது புதிய போனில் போதுமான அளவு ஸ்டோரேஜ் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அவ்வாறு இல்லையெனில், தேவையில்லாத சில ஃபைல்களை ஐபோனிலிருந்து அழித்துவிடவும்.
image: sogi
கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று உங்களது ஆண்ட்ராய்டு போனில், “மூவ் டூ ஐஓஎஸ்” என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
உங்கள் புதிய ஐபோனை ஆன் செய்து ஆப்ஸ் அண்ட் டேட்டா ஆப்ஷனுக்கு சென்று மூவ் டேட்டா ஃப்ரெம் ஆண்ட்ராய்டு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பின்பு உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில், மூவ் டூலு ஐஓஎஸ் ஆப்பை திறந்து தொடரவும் என்கிற ஆப்ஷனை தொட வேண்டும். சார்ஜிங்கில் இருக்கும் இரண்டு மொபைலும் ஒற்றுக்கொன்று அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
உங்களது ஐபோனில் காட்டும் ஆறு அல்லது பத்து இலக்க கோடை, ஆண்ட்ராய்டு போனில் டைம் செய்து இரண்டையும் இணைத்துக் கொள்ள முடியும்.
இதன்மூலம் உங்கள் ஐபோன் தற்காலிக வைஃபை நெட்வொர்க்கை உருவாக்கும். உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து இந்த நெட்வொர்க்கில் இணைந்து, டேட்டா டிரான்ஸ்பர் ஆப்ஷன் வரும் வரை காத்திருக்கவும்.
உங்களது மொலைபில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் தேர்ந்தெடுத்து டேட்டா ட்ரான்ஸ்பர் தொடங்கவும். அதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், ட்ரான்ஸ்பர் முடியும் வரை இடையில் குறுக்கிட வேண்டாம்.
இந்த டேட்டா டிரான்ஸ்பர் முடிந்த பிறகு, திரையில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றி செட்அப்பை முழுமையாக முடிக்க முடியும். ஏதேனும் விடுபட்டிருந்தால், குறிப்பிட்ட கோப்புகளை மேனுவலாக மாற்றிக் கொள்ளவும்.
குறிப்பு: இந்த டேட்டா டிரான்ஸ்பரின் போது, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் இரண்டிலும் இருக்கும் டேட்டா மற்றுமே மாற்றப்படும். இந்த செயல்முறைக்குப் பிறகு, ஆப் ஸ்டோரிலிருந்து மீதமுள்ள தேவையான ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இசை, புத்தகங்கள் மற்றும் PDF களை இந்த ஐஓஎஸ் ஆப் மூலம் மாற்ற முடியாது. டேட்டா டிரான்ஸ்பருக்கு பிறகு ஐடியூன்ஸ் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி இந்த ஃபைல்களை நீங்கள் மேனுவலாக மாற்றிக் கொள்ளலாம்.
சிக்கல்கள் என்ன?
ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்க்கு டிரான்ஸ்பர் செய்யும் போது சிக்கல் ஏதும் வந்தால், இரண்டு மொபைலையும் ரீஸ்டார்ட் செய்து, டிரான்ஸ்பரை மீண்டும் முயற்சிக்கவும்.
இரண்டு மொபைலும் ஒய்ஃபையில் இருப்பதை உறுதிசெய்து, குறுக்கிடக்கூடிய ஸ்மார்ட் நெட்வொர்க் சுவிட்ச்சை முடக்கி, கடைசியாக ஆண்ட்ராய்டு மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |