அதிகாலை நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஏன்?
ஒவ்வொருவரும் இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் குடிக்கவோ அல்லது பாத்ரூம் செல்லவோ எழுவது என்பது வழக்கமான ஒன்று தான்.
ஆனால், இதற்காக எழுந்த பின், அவர்கள் மீண்டும் தூங்கிப் போய்விடுவார்கள்.
ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் வித்தியாசம் இருக்கும்.
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் அதிகாலை நேரத்தில் 3 மணி அளவில் எழுந்து விடுகின்றனர்.
அதற்கு பிற சத்தமோ அல்லது வேறு எதுவோ காரணமில்லை. அதிகாலை நேரத்தில் திடீரென ஏற்படும் இரத்த சர்க்கரை அதிகரிப்பு தான் காரணமாகும். இதுபோன்ற நிகழ்வுகள் இரண்டு காரணங்களால் ஏற்படலாம். அவை என்னவெனில் இன்று சோமோகி விளைவு மற்றொன்று விடியல் நிகழ்வு என்பது ஆகும்.
நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்ய குளுக்கோஸ் பயன்படுத்துகிறது. அதிலும், காலையில் நாம் எழுந்திருக்க, நமக்கு கூடுதல் ஆற்றல் தேவை. எனவே, விடியற்காலை நேரத்தில் தான் அந்த நாளுக்கு நமது உடலை தயார் செய்ய சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஸை நமது உடல் பயன்படுத்தத் தொடங்கும்.
இதனால், வளர்ச்சி ஹார்மோன், கார்டிசோல் மற்றும் கேடோகோலமைன்கள் காரணமாக கல்லீரலில் இருந்து இரத்தத்துக்கு கூடுதல் குளுக்கோஸ் வெளியாகும்.
இது பொதுவாக அதிகாலை 2 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை நடக்கும். இந்த நிகழ்வுகள் நடக்கும் போது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் நீரிழிவு மருந்தின் அளவுகள் குறைந்து போகத் தொடங்கும்.
இவை அனைத்தும் சேர்ந்து தான் காலையில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது.
அதிகாலை நேரத்தில் இரத்த சர்க்கரையின் அளவு உயர்வதற்கான இரண்டாவது காரணம் சோமோகி விளைவு என்பதாகும். சோமோகி விளைவு ஹைப்பர் கிளைசீமியா என்றும் அழைக்கப்படுகிறது.
சில நேரங்களில் இரத்த சர்க்கரை மருந்துகளின் இரவு நேர டோஸுக்கு எதிராகக் குறையும்.
இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளியின் தூக்கத்தை கெடுக்கவும், நடுக்கம் அல்லது குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
குறைந்த அளவு இரத்த சர்க்கரையும் ஆபத்தானது தான். அதிகாலை 2 அல்லது 3 மணிக்கு நீங்கள் இரத்த சர்க்கரையை சரிபார்ப்பதன் மூலம் இதனைக் கண்டறியலாம். குறைந்த அளவு இரத்த சர்க்கரை இருந்தால், அது சோமோஜி விளைவாக இருக்கும்.
இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், சோமோகி விளைவு இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுத்து, ஹைப்பர் கிளைசீமியாவை ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் அதிகாலை நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது விடியல் நிகழ்வாக இருக்கலாம்.
இது எது உங்களுக்கு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய, அதிகாலை நேரத்திலும், படுக்கையில் இருந்து எழுந்த பிறகும் இரத்த சர்க்கரையின் அளவை சரிபார்க்க வேண்டும்.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும், திடீரென சோமோகி விளைவு எனப்படும் இரத்த சர்க்கரை குறையும் நிகழ்வு நாளின் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பதை மறந்து விடக்கூடாது.