ஆழ் மனதின் தன்மை பற்றி தெரியுமா? இது தெரிஞ்சா நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்
பொதுவாகவே அனைவருக்கும் தாம் நினைத்த படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என் வாழ்கையில் தான் நினைத்த எதுவும் நடக்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
உண்மையில் நாம் நினைத்தபடி தான் நம் வாழ்கை இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இதுதான் உண்மை.
வெறுமனே நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. ஆனால் நம்முடைய ஆழ்மனது எது நடக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறதோ அது கட்டாயம் நடந்தே ஆகும். நம்மில் பலரும் இந்த ஆழ்மனதை நம்பவைக்கும் விடயத்தில் தான் கோட்டைவிட்டு விடுகின்றோம்.
உதாரணமாக உடல் நலத்தில் பிரச்சனை உள்ளது என்றால், எனக்கு இது சரியாகி விடும், இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடுவேன் என்று ஆழ்மனதை நம்ப வைத்து விட்டால், நம் உடல் பிரச்சனைகளைச் தானாக சரி செய்து விடும்.
ஆழ் மனதின் சக்தி
மாறாக, எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால், நம் உடல் நிலையை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும். நம்பிக்கை என்பது அவநம்பிக்கையாக இருக்கக் கூடாது.
முழுமையாக நம்பி ஆழ்மனம் நம்பும்படி செயல்பட்டாலே இதனுடைய பலன்கள் தெரியும். நான் நம்புகிறேன் என்று மேலோட்டமாகக் கூறிக் கொண்டு, மற்றொரு புறம் பயத்துடன், சந்தேகத்துடன் இருந்தால், எதுவுமே நடக்காது.
இந்த விடயத்தில் முழுமையான நம்பிக்கை மிக முக்கியம். நம் உடல் பிரச்சனை சரியாகனும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும், பதவியை அடைய வேண்டும் என்று விருப்பப்பட்டால் மட்டும் போதாது. அதை முழுதாக நம்புவதோடு அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
எனவே, விருப்பம் வேறு நம்பிக்கை வேறு. ஆசைப்படுவதால் மட்டுமே எதுவுமே நடக்காது. முழுமையாக நம்ப வேண்டும் அது தொடர்பான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்சியாக உங்கள் ஆழ் மனதை நம்ப வைத்துவிட்டால் நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |