முட்டை இல்லாமல் ஆம்லேட் செய்ய முடியுமா? உணவு பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க
முட்டை இல்லாமல் அசைவ சுவையில் சீஸ், காய்கறிகள் மட்டுமே வைத்து ஆம்லெட் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையானவை
கோதுமை மாவு – அரை கப்
துருவிய பன்னீர் – 50 கிராம்
பால் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம்- 1
குடை மிளகாய் – ஒன்று
கேரட் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
சீஸ் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – தேவையான அளவு
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு
image: istockphoto
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமையை பலில் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
இதனுடன் துருவிய பன்னீர், உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, கேரட், சீஸ் இவற்றினை சேர்த்து நன்கு கலக்கவும்.
image: shutterstock
தோசை கல்லில் நெய் தடவை, குறித்த கலவையை ஆட்லெட் போன்று ஊற்றவும். இதன் மீது காய்கறி, சீஸ் கலவையை போட்டு மூடி வைக்கவும்.
சற்று வெந்ததும், இதில் தக்காளி சாஸ் தடவி எடுத்தால் சுவையான சீஸ், காய்கறி சேர்த்த ஆம்லெட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |