கிராமத்து ஸ்டைல் கறிவேப்பிலை பொடி... இட்லி, தோசைக்கு தனி ருசிதான்
கிராமத்து ஸ்டைலில் இட்லி, தோசைக்கு ஏற்ற கறிவேப்பிலை பொடியினை எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை
இன்றைய காலத்தில் கறிவேப்பிலையை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்து தனியாக வைத்து விடுகின்றனர்.
ஆனால் கறிவேப்பிலையில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றது. கண்பார்வை, முடி வளர்ச்சி, ரத்த சோகை, எடை குறைப்பு, செரிமான பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கின்றது.
மேலும் கிருமி நாசினியாகவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 4 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் - 5
பெருங்காயம் - சிறிதளவு
புளி - சிறிதளவு
உளுந்தம்பருப்பு - 4 டீஸ்பூன்

செய்முறை
கடாய் ஒன்றில் கறிவேப்பிலையை போட்டு மிதமான சூட்டில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் மிளகு, வத்தல், பெருங்காயம், புளி, உளுந்தம் பருப்பு இவற்றினை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டால் சுவையான கறிவேப்பிலை பொடி தயார்.
இட்லி, தோசை இவற்றிற்கு சட்னி, சாம்பார் செய்ய முடியாத தருணத்தில் இந்த பொடியை மட்டும் வைத்து இரவு சாப்பாடை முடித்துவிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |