இளநரையை நிரந்தரமாக மறைய வைக்கும் வேம்பாளம்பட்டை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
தலைமுடியை நீளமாக வளர உதவும் ஒரு அற்புத பொருள்தான் இந்த வேம்பாளம்பட்டை. பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பட்டையை தலைமுடிக்கு, சருமத்துக்கு பயன்படுத்தி வர நல்ல பலனை நமக்கு அளிக்கும்.
இந்த வேம்பாளம்பட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எண்ணெய்யை தலையில் தேய்த்து வர முடி உதிர்தல் நின்று நீளமாக வளரும். மேலும் இளநரை வராமல் தவிர்க்க முடியும்.
மேலும் தலைமுடி உதிர்வு, தலைமுடி அடர்த்தி குறைதல், நீண்ட வளர்ச்சி இன்மை, நரைமுடி, இளநரை ஆகிய அனைத்து பிரச்சினைகளை தீர்த்துவிடும்.
நாட்டு மருந்து கடைகளில் மட்டும் கிடைக்கும் இந்த வேம்பாளம்பட்டையை பயன்படுத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பதை என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெட்டிவேர்- 50g
- வெந்தயம்- 1ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 500ml
- வேம்பாளம்பட்டை-5
- ஆமணக்கு எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெட்டிவேர், வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் சூடுபடுத்த வேண்டும்.
நன்றாக தேங்காய் எண்ணெய் சூடான பிறகு இறக்கி அதில் வேம்பாளம்பட்டை மற்றும் 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்கவும்.
இதனை அதன்பிறகு தலைமுடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவரலாம்.
வேம்பாளம்பட்டை தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து முடி உடைதலைத் தடுக்கிறது.
அதோடு உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால் முடியை வலிமையாக்கி தலைமுடிக்குத் தேவையான ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |