வாய் புண், நீரிழிவு நோயினால் அவதிப்படுகிறீர்களா? சுண்டைக்காயில் சட்னி செய்து சாப்பிடுங்க
வாய் புண், வயிற்று புண்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் சுண்டைக்காயில் சட்னி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சுண்டைக்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு பயன்படுகின்றது.
ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சுண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கின்றது.
மேலும் வயிற்று புண், வாய் புண்களால் அவதிப்படுபவர்கள் சுண்டைக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சுண்டைக்காயில் சட்னி எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்
சுண்டைக்காய் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தேங்காய் - 400 கிராம்
காய்ந்த மிளகாய் - 20
நாட்டு பூண்டு - 20 பல்
புளி - 50 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
300 கிராம் பச்சை சுண்டைக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு நன்றாக கழுவிக்கொள்ளவும். பின்பு சுண்டைக்காயை உரலில் போட்டு இடித்து எடுக்கவும்.
இடித்து எடுத்த சுண்டைக்காயை கடலை எண்ணெய்யில் போட்டு பச்சைத் தன்மை போகும் வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து எண்ணெய்யில் வதக்கவும்.
தொடர்ந்து சுண்டைக்காயை இவற்றுடன் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து, தாளித்து இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |