Pongal Special: சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போன்று சுவையாக வைப்பது எப்படி என்ற கேள்வியை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், பலருக்கும் கோவில் பிரசாதம் போன்று சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு ஆசை அதிகமாகவே இருக்கும்.
அவ்வாறு கோவிலில் கொடுக்கும் சர்க்கரை பொங்களின் சுவை மாறாமல் நாம் வீட்டில் எவ்வாறு சர்க்கரை பொங்கல் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 டம்ளர்
வெல்லம் - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
முந்திரி - 25 கிராம்
நெய் - 20 மில்லி
ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 10 கிராம்
பச்சை கற்பூரம் - சிறிதளவு

செய்முறை
முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, அதனை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு வெல்லத்தை பாகு பதத்தில் காய்ச்சில் எடுக்கவும். வெல்ல பாகுவை குழைந்த சாதத்தில் போட்டு நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

அதன்பின்பு கடாய் ஒன்றில் நெய் சேர்த்து, முந்திரி, ஏலக்காய், திராட்சை இவற்றினை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பொங்கலில் சேர்க்கவும். மேலும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும்.
தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி, கடைசியாக பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |