நாவூரும் சுவையில் காரசாரமான ஆட்டுக்கால் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க
பொதுவாக அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் ஆட்டுக்கால் ரெசிபிக்கள் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
அந்தவகையில் சன்டே ஸ்பெஷலாக வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவுக்கு அசத்தல் சுவையில் ஆட்டுக்கால் குழம்பை செட்டிநாடு பாணியில் எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்
ஆட்டுக் கால் - 250 கிராம்
தனியா - 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
வர மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டுக் காலை நெருப்பில் பொசுக்கி, தோலை சுத்தமாக நீக்கி விட வேண்டும். அப்படி சுத்தம் செய்த காலை ஒரு மாதம் வைத்திருந்தாலும் இருந்தாலும் கெட்டுப் போகாது.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வர மிளகாய், கடலைப் பருப்பு, தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, ஒரு மிக்சியில் போட்டு நன்றாக, அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் புளியை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு குக்கரில் ஆட்டுக்காலுடன் உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி சுமார் பத்து விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து, மஞ்சள், அரைத்த பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிவிட்டு புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
இறுதியாக வேகவைத்த ஆட்டுக்காலை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் காரசாரமான ஆட்டுக்கால் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |