முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது.
தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது உடல், ஆரோக்கியத்தல் மேம்படுத்தல் துணைப்புரியும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையை எப்போதும் வழக்கம் போல் ஆம்லெட், செய்தோ குழம்பு செய்தோ சாப்பிடாமல், ஆரோக்கிய நம்மைகளுடன் மருத்துவ குணங்களும் நிறைந்த, புதினா, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை பேஸ்ட் கலந்து கிரீட் முட்டை சாதம் எவ்வாறு தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரைப்பதற்குபுதினா - 1 கைப்பிடியளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடியளவு
கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 7
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

முட்டை சாதத்திற்கு தேவையானவை
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
முட்டை - 5
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - சிறிதளவு
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
சாதம் - 1 கப்

செய்முறை
முதலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆகியவற்யை மிக்சர் ஜாரில் சேர்துது அத்துடன் வெங்காயம், சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள க்ரீன் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் போது, அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதன் மேல் மஞ்சள் தூள் மற்றும் முட்டைக்கு மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றான கிளறிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, இறுதியாக அதில் சாதத்தை சேர்த்து நன்கு மசாலா அனைத்தும் சாதத்துடன் ஒன்று சேரும் வரையில் கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகளை வாரிக்கொடுக்கும் க்ரீன் முட்டை சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |