அடுப்பே பற்றவைக்காமல் பச்சை புளி ரசம்: எப்படி தயாரிப்பது?
பொதுவாகவே விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது மனிதர்களாக பிறந்த அனைவரின் விருப்பமாகும்.
அப்படி ஆசையில் எல்லாவற்றையும் சாப்பிட்ட பிறகு ஏன் சாப்பிட்டோம் என தோன்றும் அளவுக்கு அவதிப்படுபவர்களும் அதிகம். இதை உணர்ந்து தான் திருவள்ளுவர் உண்பதை காட்டிலும் செரிப்பது சுகம் தரும் என கூறியுள்ளார்.
அதிகமா சாப்பிட்டு அசையவே முடியாமல் அப்பப்போ கஷ்டப்படுரவங்களா நீங்கள் ? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கு தாங்க... ஐந்தே நிமிடத்தில் அடுப்பே பற்றவைக்காமல் பச்சை புளி ரசம் எப்படி தயாரிக்கலாம்னு வாங்க பாக்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி- தேவையான அளவு
சீரகம்- 1 தேக்கரண்டி
மிளகு- 1/2 தேக்கரண்டி
பூண்டு- 3
சின்ன வெங்காயம்- 10
கறிவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
புளியை ஊறவைத்து தேவையான அளவு கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
அதற்கு பிறகு ஒரு சிறிய உரல் ஒன்றில் சீரகம், மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இடித்த கலவையை ஏற்கனவே தயார் செய்த புளிக்கரைசலில் சேர்த்தால் பச்சை புளி ரசம் ரெடி.
சாதத்துடன் இந்த ரசத்தை சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் உடனடியாக சரியாகிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |