வீட்டில் சக்கரை வள்ளி கிழங்கு இருக்கா? அப்போ இப்படி செய்து சாப்பிடுங்க

Sweet Potato Healthy Food Recipes
By Pavi Feb 10, 2026 03:59 AM GMT
Pavi

Pavi

Report

சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இதை பெரும்பாலானோர் சாப்பிட மாட்டார்கள். இந்த சக்கரை வள்ளி கிழங்கில் சாட் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இது புளிப்பு, இனிப்பு மற்றும் மசாலாப் பொருட்களை சேர்த்து செய்வதால் நமக்கு சாப்பிடும் போது ஒரு வித்தியாச சுவையை தரும்.

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க

நோய்யெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் முட்டைக்கோஸ்! இனி இப்படி சாப்பிடுங்க

இதில் வைட்டமின் A (பீட்டா கரோட்டின்), வைட்டமின் C, பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.

இதை நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குதல் போன்ற வேலைகளை செய்யும். பதிவில் இதன் ரெசிபியை பார்க்கலாம்.

வீட்டில் சக்கரை வள்ளி கிழங்கு இருக்கா? அப்போ இப்படி செய்து சாப்பிடுங்க | How To Make Sweet Potato Chaat Recipe Healthy Way

 தேவையான பொருட்கள்

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 3-4 நடுத்தர அளவிலான
  • நெய்/எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • மாதுளை விதைகள் - 2 தேக்கரண்டி
  • தயிர் - 3-4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • வறுத்த சீரகப் பொடி - ½ தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் பொடி - ½ தேக்கரண்டி
  • சாட் மசாலா - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • இனிப்பு சட்னி - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • பச்சை சட்னி - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)

வீட்டில் சக்கரை வள்ளி கிழங்கு இருக்கா? அப்போ இப்படி செய்து சாப்பிடுங்க | How To Make Sweet Potato Chaat Recipe Healthy Way

செய்முறை

முதலில் சக்கரை வள்ளி கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலிருத்து எடுக்க  வேண்டும். 

பின்னர் தோலித்த சக்கரை வள்ளி கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து பொன்னிறத்தில் வறுத்து எடுக்க வேண்டும். 

வறுத்த சக்கரை வள்ளி கிழங்கை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்க வேண்டும். அதில் உப்பு, வறுத்த சீரகப் பொடி, சிவப்பு மிளகாய், மற்றும் சாட் மசாலா சேர்க்கவும். இதை கையால் நன்கு கலக்க வேண்டும். 

வீட்டில் சக்கரை வள்ளி கிழங்கு இருக்கா? அப்போ இப்படி செய்து சாப்பிடுங்க | How To Make Sweet Potato Chaat Recipe Healthy Way

பின்னர் இதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும் .இதற்கு சுவை அதிகரிக்க மேலே மாதுளை விதைகளைத் தூவவும். நீங்கள் தயிர் விரும்பினால், சாட்டை ஒரு தட்டில் பரப்பி, அதன் மேல் தயிர் சுற்றி ஊற்றவும்.

இதில் விரும்பினால் இனிப்பு மற்றும் பச்சை சட்னியைச் சேர்க்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு இயற்கையான இனிப்பைக் கொண்டுள்ளது, எனவே சர்க்கரை தேவையில்லை. இந்த சாட் ஐ நீங்கள் ஸ்நாக்ஸ்க்கு பதிலாக சாப்பிடலாம்.       

மதுபான விரும்பியா நீங்க? இந்த 3 அறிகுறி வந்தா கவனம்... கல்லீரல் பாதிப்பு

மதுபான விரும்பியா நீங்க? இந்த 3 அறிகுறி வந்தா கவனம்... கல்லீரல் பாதிப்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                   


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US