ஒரு கப் பொட்டுக்கடலையில் ஸ்வீட் செய்யலாம்!
மதியம் நல்லா சாப்பிட்ட உடனே ஏதாவது ஸ்வீட் சாப்பிடனும்னு தோணுதா?...இப்படி பழக்கம் உள்ள ஆளாக நீக்க இருந்தா இந்த பதிவு உங்களுக்கு தாங்க...
பொதுவாகவே மதிய உணவுக்கு பிறகு ஏதாவது கொஞ்சம் இனிப்பு சாப்பிடுவதை நிறைய பேர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அப்படி நாம சாப்பிடுற இனிப்பு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருந்தால் எவ்வளவு நல்லது.
ஆரோக்கியமான ஸ்வீட்டா? ஆமாங்க சர்க்கரை நோயாளிகளும் கூட சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான பொட்டுக்கடலை ஸ்வீட் எப்படி செய்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை 1 கப்
வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை 2 கப்
எண்யெய் அல்லது நெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் பொட்டுக்கடலையை நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் இரண்டு கப் வெல்லம் அதற்கு நிகரான அளவில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இது முற்றாக கரைந்த நிலையை அடைந்தவுடன் தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் வெல்லத்துக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தலாம்.
பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து பொடியாக்கி வைத்த பொட்டுக்கடலையை சேர்த்து ஒரு மிதமான பிரவுன் நிறத்தில் பேஸ்ட் போன்ற பதத்தில் வரும் வரை நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன்பின் அந்த பொட்டுக்கடலை பேஸ்ட்டுடன் வெல்லக்கரைசலை மூன்று முறைகளில் பகுதியாக அதனுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும். இறுதியில் தேவையான அளவு நெய் சேர்த்துக்கொண்டால் ஸ்வீட் தயார்.
இறுதியில் நெய் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஸ்வீட் கடாயில் ஒட்டாமல் கலன்றுவரும்.
உணவுக்கு பின்னர் எடுத்துக்கொள்வதற்கும் குழந்தைகளுக்கும் இந்த இனிப்பு மிகவும் சுவையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.