வீடிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்வது எப்படி? இந்த ஆறு பொருட்கள் போதும்
சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும் சன்ஸ்கிரீமை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சன்ஸ்கிரீன்
வெயில் கூடிய பிரதேசங்களில் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியமாகும். இதை பயன்படுத்தினால் சூரியக்கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் சருமம் அழகாக இருக்கும்.
வீட்டில் செய்யப்படும் இதை ஹோம் மேட் சன் ஸ்கிரீன் என்று அழைக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்
- 1/4 கப் தேங்காய் எண்ணெய்
- 1/4 கப் ஷியா வெண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் சிங்க்
- ஆக்சைடு பொடி 1 டேபிள் ஸ்பூன்
- பீஸ் வேக்ஸ் 1 டீஸ்பூன்
- கேரட் விதை எண்ணெய் 10 துளிகள்
- அத்தியாவசிய எண்ணெய்
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கிண்ணத்தை வைக்க வேண்டும்.
இந்த க்ரீம் செய்ய தேவையான பொருட்களை அதாவது தேங்காய் எண்ணெய், ஷியா வெண்ணெய், மற்றும் பீஸ்வேக்ஸ் போன்ற பொருட்களை அந்த கிண்ணத்தில் போட்டு மிதமான சூட்டில் உருக்க வேண்டும்.
இதன் பின்னர் அடுப்பில் இருந்து கிண்ணத்தை அகற்றி அதனை ஆற வைக்கவும். இப்பொழுது கவனமாக சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இதனுடன் கேரட் விதை எண்ணெய் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை கலவையில் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். இந்த கலவையை ஒரு கண்ணாடி போத்தலில் மாற்றி காற்று புகாதவாறு தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |