Sundaikaai Thuvayal: வயிற்று பிரச்சினைக்கு குட்பை கூறும் சுண்டைக்காய்... துவையல் செய்வது எப்படி?
வயிற்று பிரச்சினையை நீக்கி ஆரோக்கியத்தை அளிக்கும் சுண்டைக்காயில் துவையல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுண்டைக்காய்
சுண்டைக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதுடன், அதிகமான சத்துக்களையும் கொண்டுள்ளது. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதுடன், அஜீரணக்கோளாறு மற்றும் வயிற்று பிரச்சினை, குடல் புழு பிரச்சினையையும் சரிசெய்கின்றது.
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் – 1 கப்
சீரகம்- 1 ஸ்பூன்
கடலைபருப்பு- 3 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
வரமிளகாய் – 6
புளி – சிறிதளவு
இஞ்சி-2
எண்ணெய் – 2
டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
செய்முறை
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் சுண்டைக்காயை வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
சுண்டைக்காயை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, புளி, இஞ்சிசேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு வரமிளகாயை இரண்டாக உடைத்து அனுடன் சேர்த்து சிறிது வதக்கி எடுத்துக்கொண்டு, முதலில் வதக்கிய சுண்டைக்காயையும், தற்போது வதக்கிய பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை கொண்டு தாளித்து, அதில் துவையலையும் சேர்த்து சிறிது வதக்கி இறக்கினால் சுண்டைக்காய் துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |