சீலா மீன் வாங்குனா இப்படி பொடிமாஸ் செய்ங்க - பத்து நிமிடம் போதும்
சீலாமீன் வைத்து வழக்கமாக செய்யும் ரெசிபியை விட்டு விட்டு பதிவில் கூறப்பட்ட இந்த பொடிமாஸ் பத்து நிமிடத்தில் செய்தால் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சீலா மீன் பொடிமாஸ்
மீன்களிலேயே அதீத சுவை கொண்ட மீனுனா அது சீலா மீன் தான். இது குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரதச்சத்து கொண்ட ஒரு சிறந்த கடல் உணவு.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தசைகளை வலுவாக்குகிறது, மூளை செயல்பாட்டை தூண்டுகிறது, மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூலம் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இதை வைத்து குழம்பு, வறுவல் செய்திருப்பீர்கள். ஆனால் பொடிமாஸ் செய்திருக்கிறீர்களா. இந்த பதிவில் அதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- சீலா மீன்,
- முட்டை,
- மஞ்சள் தூள்,
- மிளகாய் தூள்,
- கரம் மசாலா தூள்,
- மிளகு தூள்,
- உப்பு,
- தேங்காய் எண்ணெய்,
- கடுகு,
- சோம்பு,
- வெள்ளை பூண்டு,
- சின்ன வெங்காயம்,
- பச்சை மிளகாய்,
- தக்காளி,
- கருவேப்பிலை
செய்முறை
பொடிமாஸ் செய்ய சீலா மீனை சுத்தம் செய்து துண்டு துண்டாக வெட்டி வைத்து, அதில் மஞ்சள் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து நீராவியில் அவித்து எடுக்கவும்.
அவித்த பின் மீனை வெளியே எடுத்து மீனை வேறாகவும் மு்ளை வேறாகவும் எடுத்து மீனை நன்கு உதிரி உதிரியாக மாற்றி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக வேண்டும்.

சூடான எண்ணெயில் கடுகு, சோம்பு, தட்டிய வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கவும், இதில் சின்ன வெங்காயத்தை பொடியதாக நறுக்கி சேர்த்து அத்துடன் இரண்டு பச்சை மிளகாய் எடுத்து சேர்த்துக்கொண்டு வதக்கி கொள்ளவும்.
பின் தக்காளி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து அத்துடன் கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான அளவு முட்டையை உடைத்து ஊற்றி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் வரை மிக்ஸ் செய்து கொண்டு எடுத்து வைத்த மீனை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கி எடுத்து 5 நிமிடம் வரை மிக்ஸி செய்து மிளகு பொடி சேர்த்து எடுத்தால் சீலா முட்டை பொடிமாஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |