10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல்.. அதே சுவையுடன் இருக்கும் ரவா லட்டு - செய்வது எப்படி
இனிப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும் வீட்டிலேயே செய்யும் ரவா லட்டு பலருக்கு பிடித்துப்போகும்.
ரவா லட்டு செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். எத்தனை நாட்கள் ஆனாலும், கெட்டுப்போகாத அதே சுவையில் கிடைக்கும் ரவா லட்டு எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வறுத்த ரவை – ஒரு கப்
- சர்க்கரை – முக்கால் கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
- ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன்
- காய்ச்சி ஆறின பால் – அரை கப்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்,
- முந்திரிப் பருப்பு 10,
- பாதாம் பருப்பு – 5,
- உலர் திராட்சை – 10
செய்முறை விளக்கம்
முதலில் ரவா லட்டு செய்ய ரவையை நன்கு சூடு ஏற வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, அதே மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை பாகு காய்ச்சி சேர்ப்பது எல்லாம் சரி வராது. இந்த முறையில் அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.
இதன்பின்னர், முந்திரி, பாதாம் பருப்புகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய்களை தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு தேங்காயின் தோல் பகுதியை நீக்கி வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை மட்டும் துருவலாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த துருவிய தேங்காயை வெறும் வாணலியில் லேசாக 2 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காயை வறுத்து சேர்ப்பதால் சீக்கிரம் ரவா லட்டு கெட்டுப் போகாது, சுவையும் அற்புதமாக இருக்கும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடி