வித்தியாசமாக இறாலை நெய் கிரேவியாக சமைத்து பாருங்க... அம்புட்டு ருசியா இருக்கும்
ஹோட்டல் ஸ்டைலில் இறால் நெய் கிரேவி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இறால்
அசைவ பிரியர்களுக்கு கடல் உணவுகள் என்றால் அதிகமாகவே பிடிக்கும். அதிலும் கடலில் கிடைக்கும் மீன்கள் இவற்றினை விட இறாலையும் தற்போது அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.
இறால் கிரேவி, இறால் 65 என செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இறால் நெய் கிரேவி ஹோட்டல் சுவையில் சுலபமாக செய்து அசத்தலாம்.
நெய் சேர்த்து காரம் மற்றும் புளிப்பு சுவையுடன் செய்யப்படும் இறால் நெய் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

செய்முறை
இறால் - அரை கிலோ
நெய் - 3ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
வெள்ளை பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் தடவி வைத்து கொள்ளவும். கடாய் ஒன்றில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் இவற்றினை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பூண்டு இவற்றினையும் பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்க்கவும்.

அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதில் இறால் மற்றும் வறுத்து பொடித்த மசாலா தூள், இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதங்கி நெய் பிரிந்து வரும் தருணத்தில் அடுப்பை அணைத்துவிடவும். தற்போது சுவையான இறால் நெய் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |